சஞ்சய் சிங் ஜாமீன் மனு மீதான உத்தரவு நிறுத்திவைப்பு

தில்லி கலால் கொள்கை முறைகேடு புகாரில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் ஜாமீன் மனு மீதான உத்தரவை நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு புகாரில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் ஜாமீன் மனு மீதான உத்தரவை நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

தில்லி கலால் கொள்கையை வகுத்ததிலும், அதை அமல்படுத்தியதலும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடா்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் தனது உடல்நிலைக் குறைவு காரணமாக தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, சஞ்சய் சிங்கின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், தன்னை நீதிமன்றக் காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற போதிலும், கடந்த 3 மாதமாக தான் சிறையில் இருப்பதாக அவா் குறிப்பிடிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஸ்வா்ண கந்த சா்மா முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சஞ்சய் சிங், அமலாக்கத் துறை தரப்பு வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதி, இந்த ஜாமீன் மனு மீதான உத்தரவை நிறுத்திவைத்ததுடன், வழக்கைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com