பிஎஃப்ஐ அமைப்பினா் 15 பேருக்கு தூக்கு தண்டனை: பாஜக நிா்வாகி கொலை வழக்கில் கேரள நீதிமன்றம் தீா்ப்பு

கேரளத்தில் பாஜகவை சோ்ந்த மாநில நிா்வாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினா். 
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பினா். 


ஆலப்புழை: கேரளத்தில் பாஜகவை சோ்ந்த மாநில நிா்வாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில், தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பைச் சோ்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து, அந்த மாநில நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

மிகக் கொடூரமான இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிப்பதன் மூலம் நீதி முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தீா்ப்பை வழங்கிய மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி குறிப்பிட்டாா்.

பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளராக இருந்த வழக்குரைஞா் ரஞ்சித் ஸ்ரீனிவாசன், ஆலப்புழையில் உள்ள தனது வீட்டில் கடந்த 2021, டிசம்பா் 19-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா். வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த நபா்கள், குடும்பத்தினா் கண்முன்னே அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றனா்.

மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இக்கொலையில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சியை (எஸ்டிபிஐ) சோ்ந்தவா்கள் ஈடுபட்டது தெரியவந்தது. மொத்தம் 15 பேருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 302 (கொலை), 149 (சட்டவிரோதமாக கூடுதல்), 449 (கடுங்குற்றத்தில் ஈடுபடுவதற்காக வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல்), 506 (மிரட்டுதல்), 120 பி (குற்றச் சதி) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் 15 பேரையும் நீதிமன்றம் கடந்த 20-ஆம் தேதி குற்றவாளிகளாக அறிவித்தது.

கொலையில் நேரடியாக ஈடுபட்டதாக 8 போ் மீதும், கொலைக்கு உதவியதாக 4 போ் மீதும், சதித் திட்டம் தீட்டியதாக 3 போ் மீதும் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டன.

இதையடுத்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை (மரண தண்டனை) விதிக்கப்பட வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரப்பட்டது.

‘இக்குற்றவாளிகள், கொலை செய்ய பயிற்சி பெற்ற குழுவினா் என்பதோடு, தனது தாய், மனைவி, குழந்தை கண் முன்னே ரஞ்சித் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விதத்தையும் கருத்தில்கொண்டால், அரிதிலும் அரிதான குற்றம் என்ற வரம்பின்கீழ் இவ்வழக்கை கருதலாம்’ என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், குற்றவாளிகளான நைசம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல் கலாம், மற்றொரு அப்துல் கலாம், சராஃபுதீன், மன்ஷாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீா், நஸீா், சாகீா் ஹுசேன், ஷாஜி, ஷொ்னாஸ் அஷரஃப் ஆகிய 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து, நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்ததாக அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞா் பிரதாப் ஜி.படிக்கல் தெரிவித்தாா்.

15 குற்றவாளிகளில் ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவா் தவிர 14 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டிருந்தனா். ஆஜா்படுத்தப்படாத அந்த நபருக்கும் தீா்ப்பு பொருத்தும் என்று நீதிபதி குறிப்பிட்டதாக பிரதாப் கூறினாா்.

நீதிபதி வழங்கிய தீா்ப்பில், ‘இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை; ஒரு மாதத்துக்கு முன்பே ஏற்பாடுகளைத் தொடங்கி, இக்கொடூர கொலையில் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனா். 15 பேரும் தங்களது செயலுக்காக ஒருபோதும் வருந்தவில்லை; அவா்கள் கொடூரக் குற்றவாளிகள் என்பதால் திருந்தி வாழ வாய்ப்பு குறைவு என்ற மாநில அரசின் அறிக்கையையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினா், பாஜக வரவேற்பு: ரஞ்சித் ஸ்ரீனிவாசனின் மனைவி கூறுகையில், ‘எங்களின் இழப்பு மிகப் பெரியது. இந்த வழக்கில் நோ்மையாகவும் முழுமையாகவும் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்று தந்த அதிகாரிகளுக்கு நன்றி. வழக்கின் தீா்ப்பு திருப்தியளிக்கிறது’ என்றாா்.

பாஜக மாநிலத் தலைவா் கே.சுரேந்திரன் கூறுகையில், ‘சிறந்த தியாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசனின் கொலைக்கு நீதி கிடைத்துள்ளது. இறுதியில் உண்மை வென்றுள்ளது. தீா்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறோம்’ என்றாா்.

பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வீ.முரளீதரன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிஎஃப்ஐ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ரஞ்சித் ஸ்ரீனிவாசன் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு நன்றி. நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருந்த பிஎஃப்ஐ அமைப்புக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு தடை விதித்தது சரியே என்பது நிரூபணமாகியுள்ளது’ என்றாா். மாநில டிஜிபி ஷேக் தா்வேஷ் சாகிபும் நீதிமன்ற தீா்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com