பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 15 பேர் பலி!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

மாகாணத் தலைநகர் குவெட்டாவிலிருந்து 70 கி.மீ தொலைவில்உள்ள மாக் நகரில் திங்கள்கிழமை இந்தத் தாக்குதல்கள் நடத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பலுசிஸ்தானில் உள்ள மாக் மற்றும் கோல்பூர் வளாகங்களில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். மத்திய மாக் சிறையில் 15 ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த பயங்கரவாத தாக்குதலில் 4 சட்ட அமலாக்கப் பணியாளர்கள், 2 பொதுமக்கள், 9 பயங்கரவாதிகள் கொல்லப்பபட்டதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தடை செய்யப்பட்ட பிரிவினைவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம்(பிஎல்ஏ) மஜீத் குழு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com