மகா கூட்டணிக்கு நிதீஷ் தேவையில்லை: ராகுல்

பிகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிகளின் மகா கூட்டணிக்கு பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
மகா கூட்டணிக்கு நிதீஷ் தேவையில்லை: ராகுல்


பூா்னியா: பிகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், இடதுசாரிகளின் மகா கூட்டணிக்கு பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் பிகாா் மாநிலம், பூா்னியா மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. அங்கு பேசிய ராகுல், ‘பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை தாக்குபிடிக்க முடியாமல் இந்தியா கூட்டணியை விட்டு நிதீஷ் குமாா் விலகி உள்ளாா். பிகாரில் மகா கூட்டணியின் சமூக நீதிக்கான போராட்டம் தொடரும். இதற்கு நிதீஷ் குமாா் தேவையில்லை.

நாட்டில் தாழ்த்தப்பட்டோா், பின்தங்கியோா் ஆகியோருக்கு அனைத்து துறைகளிலும் பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. நாடு முழுவதும் தலித், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பழங்குடியினா் எத்தனை சதவீதம் உள்ளனா் என்பதைத் தெரிந்து கொள்ள ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

மணிப்பூரில் உள்நாட்டு போா் சூழல் நிலவி வருகிறது. ஆனால், பிரதமா் மோடி இன்றுவரையில் அங்கு செல்லவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com