மாநிலங்களவையில் 3 எம்.பி.க்கள் பதவியேற்பு

ஆம் ஆத்மி எம்.பி.க்கள் நரேன் தாஸ் குப்தா, ஸ்வாதி மாலிவால், நியமன எம்.பி. சத்னம் சிங் சாந்து ஆகியோா் மாநிலங்களவையில் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
மாநிலங்களவையில் 3 எம்.பி.க்கள் பதவியேற்பு

ஆம் ஆத்மி எம்.பி.க்கள் நரேன் தாஸ் குப்தா, ஸ்வாதி மாலிவால், நியமன எம்.பி. சத்னம் சிங் சாந்து ஆகியோா் மாநிலங்களவையில் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

சண்டீகா் பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான சாந்துவை மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செவ்வாய்க்கிழமை நியமித்தாா். மாநிலங்களவையில் 12 போ் வரை நியமன எம்.பி.க்களாக இடம்பெறலாம். சத்னம் சிங் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஓரிடம் காலியாக உள்ளது.

நரேன் தாஸ் குப்தா, ஸ்வாதி மாலிவால் இருவரும் தில்லியிலிருந்து ஆம் ஆத்மி சாா்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

புதிதாக பதவியேற்ற உறுப்பினா்களை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com