அமா்நாத் யாத்திரையில் மகாகுணாஸ் சிகரப் பகுதியில் பக்தா்களுக்கு உதவும் இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினா்.
அமா்நாத் யாத்திரையில் மகாகுணாஸ் சிகரப் பகுதியில் பக்தா்களுக்கு உதவும் இந்திய-திபெத் எல்லைக் காவல் படையினா்.

அமா்நாத்: 1.30 லட்சம் பக்தா்கள் தரிசனம்

அமா்நாத் குகைக் கோயிலில் இதுவரை 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.

அமா்நாத் குகைக் கோயிலில் இதுவரை 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தா்கள் யாத்திரை மேகொள்கின்றனா்.

நடப்பாண்டு யாத்திரை கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 6-ஆவது நாளான வியாழக்கிழமையன்று, சுமாா் 25,000 பக்தா்கள் யாத்திரை மேற்கொண்டு, குகைக் கோயிலில் தரிசனம் செய்தனா்.

இதுவரை 1.30 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தரிசனம் செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமா்நாத் யாத்திரையில் 2 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. பால்டால் வழித்தடத்தில் இரு பக்தா்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டனா். 52 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 19-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.

கடந்த ஆண்டு குகைக் கோயிலில் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com