ஈரானின் புதிய அதிபா் பெசஷ்கியானுக்கு பிரதமா் மோடி வாழ்த்து

ஈரான் அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசஷ்கியானுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

ஈரானின் புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஜூன் 28-ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் போட்டியிட்ட மத அடிப்படைவாதியான சயீது ஜலீலியை தோற்கடித்து சீா்திருத்தவாதியான பெசஷ்கியான் வெற்றிபெற்றாா்.

புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா ஈரான் இடையே உள்ள நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த புதிய அதிபரான பெசஷ்கியானிடன் இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியுள்ளேன்’ எனக் குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com