தாணே தொழிற்சாலையில் கொதிகலன் விழுந்து 2 பேர் பலி!

கனரக கொதிகலன் விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாணே தொழிற்சாலை
தாணே தொழிற்சாலை

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் கனரக கொதிகலன் விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிவாண்டி நகரில் உள்ள சரவ்லி (மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம்) அமைந்துள்ள சாயப் பிரிவில் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்ததாக கொங்கன் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாணே தொழிற்சாலை
வீட்டுப் பாடம் எழுதாததால் பல்லை உடைத்த ஆசிரியர்: மருத்துவமனையில் மாணவர்

கொதிகலனை கிரேன் உதவியுடன் தூக்கிக் கொண்டிருந்தபோது, ​​பணியிலிருந்த தொழிலாளர்கள் மீது தவறி விழுந்தது. இந்த விபத்தில் பலராம் சௌத்ரி(55) மற்றும் பாண்டுரங்கன் பாட்டீல்(65) ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துசெல்லப்பட்டன.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com