பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

காங்கிரஸ் ஒரேயொரு இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

காலை 11 மணி நிலவரப்படி, பிகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய இந்தியா கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பிகாரில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் ஒரேயொரு இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 14 இடங்களிலும், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 11 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com