வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

மிகுந்த பரபரப்புக்கிடையே நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!
வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்) மற்றும் ஆயுஷ் (ஆயுா்வேத மருத்துவம்) படிப்புகளுக்கான நீட் தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் இன்று(ஜூன் 4) வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 9,96,393 மாணவர்களும், 13,31,321 மணவிகளும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த மாணவர்கள் 17 பேரும் இத்தேர்வை எழுதியுள்ளனர்.

இதனிடையே, நீட் தோ்வு தொடங்குவதற்கு முன்பாக பிகாா் மாநிலத்தில் நீட் வினா தாள் கசிந்ததாக புகாா் எழுந்தது.

இந்த நிலையில், மே 5-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தோ்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் புதிதாக தோ்வு நடத்த உத்தரவிடக் கோரி ஷிவாங்கி மிஸ்ரா மற்றும் சிலா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com