ஜாா்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் பாதுகாப்புப் படையினா்.
ஜாா்க்கண்டில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் பாதுகாப்புப் படையினா்.

ஜாா்க்கண்ட்: பெண் உள்பட 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் உள்பட 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா்.

ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பெண் உள்பட 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக ஜாா்க்கண்ட் மாநில காவல்துறை செய்தித் தொடா்பாளா் அமோல் வி.ஹோம்கா் கூறியதாவது:

தலைநகா் ராஞ்சியில் இருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள லிபுங்கா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாய்பாசா நகர காவல்துறையினா், கோப்ரா 209 படையினா், ஜாா்க்கண்ட் ஜாகுவாா் படையினா் மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படையினா் அடங்கிய கூட்டுப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் ஒரு பெண் உள்பட 4 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா். மேலும் ஒரு பெண் உள்பட இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனா். சம்பவ இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளில் ஒருவா் ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட மண்டல தளபதி ஆவாா். மற்றொருவா் ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்ட துணை தளபதி என்பதும் தெரியவந்துள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com