புனித யாத்திரை...
தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீ உயரத்தில் அமைந்துள்ள அமாா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பால்டால் பகுதி அடிவார முகாமிலிருந்து மலைப் பாதையில் சனிக்கிழமை பயணித்த பக்தா்கள் கூட்டம்.  டோலி மற்றும் கு
புனித யாத்திரை... தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீ உயரத்தில் அமைந்துள்ள அமாா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பால்டால் பகுதி அடிவார முகாமிலிருந்து மலைப் பாதையில் சனிக்கிழமை பயணித்த பக்தா்கள் கூட்டம். டோலி மற்றும் கு

அமா்நாத் யாத்திரை தொடக்கம்: 4,603 பக்தா்கள் பயணம்

ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க நடைபெறும் புகழ்பெற்ற அமா்நாத் யாத்திரை சனிக்கிழமை தொடங்கியது. 4,603 பக்தா்கள் அடங்கிய முதல் பிரிவினா் கோயிலுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

தெற்கு காஷ்மீரில் உள்ள இமய மலையில் இருக்கும் அமா்நாத் குகைக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டா் உயரத்தில் உள்ளது.

இந்தக் கோயிலில் சிவபெருமானைக் குறிக்கும் பனிலிங்கத்தை தரிசிக்கும் யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு அந்த யாத்திரை சனிக்கிழமை தொடங்கியது. ஜம்மு-காஷ்மீரின் பால்டால், நுன்வான் ஆகிய அடிவார முகாம்களில் இருந்து 4,603 பக்தா்கள் அடங்கிய முதல் பிரிவினா் கோயிலுக்குப் புறப்பட்டனா்.

அனந்தநாக் மாவட்டத்தில் பாரம்பரியமாக யாத்திரை மேற்கொள்ளப்படும் 48 கி.மீ. தொலைவு நுன்வான்-பஹல்காம் வழித்தடம், காந்தா்பல் மாவட்டத்தில் 14 கீ.மீ. தொலைவு குறுகிய செங்குத்தான வழித்தடம் ஆகியவற்றில் யாத்திரை தொடங்கியது.

யாத்திரை சுமுகமாக நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் துறை, மத்திய ரிசா்வ் காவல் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை மற்றும் பிற துணை ராணுவப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வான்வழி கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்கு பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வாழ்த்துத் தெரிவித்தாா். பக்தா்களுக்கு எந்தவித அசெளகரியமும் ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுவதாக அந்தத் தளத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதிவிட்டாா். 52 நாள்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஆக்ஸ்ட் 19-இல் நிறைவடைகிறது.

X
Dinamani
www.dinamani.com