ம.பி.: இளைஞர்களைக் கட்டிவைத்து அடித்த தலைமைக் காவலர் இடைநீக்கம்!

ம.பி.யில் இளைஞர்களைக் கட்டிவைத்து அடித்த தலைமைக் காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Cop suspended, arrested for beating Dalit man in Andhra Pradesh
Cop suspended, arrested for beating Dalit man in Andhra Pradesh

மத்தியப் பிரதேசத்தின் பெத்துல் மாவட்டத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக இரண்டு இளைஞர்களைக் கட்டிவைத்து அடித்த தலைமைக் காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் ன மொஹ்டா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திஸ்லி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும், அதன் விடியோ சமூக ஊடகத் தளங்களில் வெளிவந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடியோவில் இரண்டு இளைஞர்கள் கயிற்றால் கட்டப்பட்டு, பிளாஸ்டிக் பைப்பால் அடிக்கப்படுவதும் வெளியாகியுள்ளது.

மொபைல் போன் திருட்டு வழக்கு தொடர்பாக தலைமைக் காவலர் கம்தா பிரசாத் கீர் இருவரையும் தாக்கிய விடியோ ஞாயிற்றுக்கிழமை தங்கள் கவனத்திற்கு வந்ததாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கமலா ஜோஷி தெரிவித்தார்.

விடியோவை அறிந்த பெத்துல் காவல்துறை கண்காணிப்பாளர், தாம்ஜிபுரா காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட பிரசாத் கீர் இடைநீக்கம் செய்துள்ளதாக ஜோஷி கூறினார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com