பிகாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!

பிகாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!

ராணுவ பயிற்சி மையத்தின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமான ஓட்டிகள் இருவர் காயம்.

பிகார் மாநிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் காயங்களுடன் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.

கயாவில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையத்தில் இருந்து இன்று காலை வழக்கமான பயிற்சிக்காக ஒரு பெண் விமானி உள்பட இருவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டுள்ளனர்.

காஞ்சன்பூர் கிராமம் அருகே ஹெலிகாப்டர் சென்றபோது விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

பிகாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!
தெலங்கானா ரயிலில் தீ விபத்து!

அங்கிருந்த கிராம மக்கள் உடனடியாக விமானிகளை மீட்டு ராணுவ பயிற்சி மையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவ அதிகாரிகள், இரண்டு விமானிகளையும் சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com