பஞ்சாப் சட்டப்பேரவை: தலையில் கோணிப்பை மூட்டையுடன் நுழைந்த எம்.எல்.ஏ..!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ராஜ்குமார் சப்பேவால், தலையில் கோணிப்பை மூட்டையுடன் சட்டப்பேரவை வளாகத்தில் நுழைந்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் சப்பேவால்
காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் சப்பேவால்படம் | ஏஎன்ஐ

பஞ்சாப் மாநில நிதிநிலை அறிக்கை இன்று(மார்ச் 5) தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க எம்.எல்.ஏ.க்கள் வருகைதந்தனர். அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ராஜ்குமார் சப்பேவால், தலையில் கோணிப்பை மூட்டையுடன் சட்டப்பேரவை வளாகத்தில் நுழைந்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

தலையில் ஏற்றிய பாரத்துடன் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜ்குமார் சப்பேவால், “பஞ்சாப் அரசின் மீதுள்ள கடன் சுமையை தாங்கிக் கொள்ளவே வந்திருக்கிறேன். கடனை குறைப்பதாக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், கடன் அதிகரித்து வருகிறது” என்று கூறியபடி நகர்ந்து சென்றார்.

பஞ்சாப்பில் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி, முதல்வர் பகவந்த் மான் தலைமையில் அரசு அமைந்துள்ளது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அம்மாநில நிதியமைச்சர் ஹர்பால் சீமா இன்று தாக்கல் செய்தார். இதனிடையே அரசுக்கு எதிராக முழக்கமெழுப்பியபடி சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் எம். எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com