அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

பொது இடங்களில் கவனத்துடன் பேச வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உரையாற்றும் ராகுல் காந்தி
மத்தியப் பிரதேசத்தில் உரையாற்றும் ராகுல் காந்திபடம் | பிடிஐ

மகக்ளவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் இப்போதே தேர்தல் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், தேர்தல் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் மக்கள் மத்தியில் பேசும்போது அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாதென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களை ’பிக்பாக்கெட்’ எனக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையான நிலையில், ராகுலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை கடந்த டிசம்பரில் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, பொது இடங்களில் பேசும்போது பிக் பாக்கெட் போன்ற அநாகரிக சொற்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும், அதிக கவனத்துடன் பேச வேண்டுமெனவும் ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com