உ.பி.: சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் பாஜகவில் ஐக்கியம்!

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
உ.பி.: சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் பாஜகவில் ஐக்கியம்!

உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் வரிசையாக பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில், உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யும், கட்சியின் மூத்த நிா்வாகியுமான ராஜேஷ் மிஸ்ரா பாஜகவில் நேற்று (மார்ச். 5) இணைந்தாா்.

பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் முன்னிலையில் அக்கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்த ராஜேஷ் மிஸ்ரா
பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் முன்னிலையில் அக்கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்த ராஜேஷ் மிஸ்ரா

இந்நிலையில், இன்று(மார்ச். 6) உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலர் அக்கட்சியிலிருந்து விலகி தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். உத்தரப்பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சிக்கு இது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அதேபோல மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகிய தலைவர்களும், தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com