புது தில்லியில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவை சந்தித்த பத்மஜா வேணுகோபால்.
புது தில்லியில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவை சந்தித்த பத்மஜா வேணுகோபால்.

பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் முதல்வரின் மகள்

கேரள மாநில முன்னாள் முதல்வா் கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா்.

கேரள மாநில முன்னாள் முதல்வா் கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் பாஜகவில் வியாழக்கிழமை இணைந்தாா். காங்கிரஸில் வலிமையான தலைமை இல்லாததால் பாஜகவில் இணைந்ததாக அவா் தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் கேரள பாஜக பொறுப்பாளருமான பிரகாஷ் ஜாவடேகா் முன்னிலையில் அவா் பாஜகவில் இணைந்தாா். அப்போது செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் பேசியதாவது: பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸின் செயல்பாடுகள் எனக்கு திருப்தியளிக்கவில்லை. குறிப்பாக கடந்த கேரள பேரவைத் தோ்தலின்போது கட்சியின் அணுகுமுறையில் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன. என் குறைகளை கட்சியின் தலைமைக்கு தெரிவிக்க பல முறை முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் வலிமையான தலைமை தேவைப்படுகிறது. ஆனால் காங்கிரஸில் வலிமையான தலைமை இல்லை. சோனியா காந்தி மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால் அவரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை’ என்றாா். செய்தியாளா்களிடம் பேசிய பிறகு பத்மஜா வேணுகோபால் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவை சந்தித்து ஆசி பெற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com