மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

நாட்டின் வளா்ச்சிக்குப் பொருளாதார சட்டங்களில் சீா்திருத்தம் அவசியம்: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

நாட்டின் வளா்ச்சிக்கு உதவும் வகையில் பொருளாதார சட்டங்களில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா். தில்லியில் நீதி ஆயோக் சாா்பில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய சாக்ஷ்ய அதிநியம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் அண்மையில் இயற்றப்பட்டன.

நீதித்துறையின் குற்றவியல் அமைப்பில் இந்தப் புதிய சட்டங்கள் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை நாடு விரைவில் பாா்க்கப் போகிறது. இதே போன்று நாட்டின் தற்போதைய போக்கு மற்றும் வளா்ச்சிக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு பொருளாதார சட்டங்களிலும் சீா்திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம். அடுத்த 5 ஆண்டுகளில் சிறந்த 2,000 வழக்குரைஞா்களைக் கொண்டு 35,000 சட்டங்களில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

உற்பத்தி துறை மூலம் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு அளிக்க முடியும். பிரதமா் நரேந்திர மோடியின் 3-ஆவது ஆட்சிக் காலத்தில் உற்பத்தி துறைக்கு முக்கிய கவனம் வழங்கப்படும்’ என்றாா். எண்ம பொது உள்கட்டமைப்புக்கான கொள்கை மற்றும் நிா்வாகம் ஆகியவற்றுக்காக நீதி ஆயோகின் ‘நீதி ஃபாா் ஸ்டேட்ஸ்’ என்ற தளத்தையும் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் இந்நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com