அருணாசலப் பிரதேசத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப் பாதை திறப்பு!

சேலா சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு பிரதமர் மோடி 2019, பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார்.
அருணாசலப் பிரதேசத்தில் உலகின் மிக நீளமான இருவழி  சுரங்கப் பாதை திறப்பு!
படம் | பிடிஐ
படம் | பிரதமர் மோடி எக்ஸ் தளம்

அருணாசலப் பிரதேசத்தின் டவாங் பகுதியில் பாலிபாரா - சரித்வார் - தவாங் சாலை மார்க்கத்தில் அனைத்து பருவநிலைகளிலும் சாலை பயணத்தை எளிதாக்கும் வகையில் அமைந்துள்ள ’சேலா சுரங்க வழிச் சாலையை’ பிரதமர் மோடி இன்று(மார்ச்.9) கொடியசைத்து திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சேலா சுரங்கப்பாதை கட்டுமானத்திற்கு பிரதமர் மோடி 2019, பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

டவாங் பகுதியில் பாலிபாரா - சரித்வார் - தவாங் சாலை மார்க்கத்தில் அமைந்துள்ள சேலா சுரங்க வழிச் சாலை வாயிலாக கடும் பனிப்பொழிவு, பெருமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் சிரமமின்றி பயணிக்கலாம்.

ரூ.825 கோடியில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதையாக கட்டப்பட்டுள்ள சேலா சுரங்கப்பாதை பொறியியல் வல்லுநர்களின் திறனை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.இத்திட்டம் நவீன ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதால், உயர் தரத்திலான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

படம் | பிடிஐ

கடல் மட்டத்திலிருந்து 13,000 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த சுரங்க வழிச்சாலை சீன எல்லையொட்டிய பகுதிகளுக்கு ராணுவ ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை மிக எளிதாக கொண்டு பேருதவி புரிகிறது.

எல்லை சாலை அமைப்பால்(பி.அர்.ஓ.) கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை 980 மீட்டர் மற்றும் 1555 மீட்டர் நீளமுள்ள 2 சுரங்கங்களை உள்ளடக்கியது. சேலா கணவாயின் அடியில் 400 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள இந்த சுரங்க வழிச்சாலையில், பயணிகள் இன்று முதல் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் | பிடிஐ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com