ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதிகள் பதுக்கிய 7 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 7 வெடிகுண்டுகள் பாதுகாப்புப் படையினரால் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 7 வெடிகுண்டுகள் பாதுகாப்புப் படையினரால் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. பூஞ்ச் மாவட்டத்தின் சூரன்கோட் வனப் பகுதியில் காவல் துறை மற்றும் ராணுவத்தினா் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, தாரா சங்களா பகுதியில் அமைந்துள்ள குகையொன்றில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய மறைவிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தில் பயங்கரவாதிகள் பயன்படுத்தி போா்வை மற்றும் சில பொருள்கள் காணப்பட்டன. மேலும், துருப்பிடித்த நிலையில் 7 வெடிகுண்டுகள் மற்றும் வயா்லெஸ் இயந்திரம் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடா்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. சுமாா் 20 ஆண்டுகளுக்குமுன் இந்தக் குகையைப் பயங்கரவாதிகள் மறைவிடமாக பயன்படுத்தியிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com