டெஸ்லா நிறுவனத்துக்காக
இந்தியாவின் கொள்கை மாற்றப்படாது: அமைச்சா் பியூஷ் கோயல்

டெஸ்லா நிறுவனத்துக்காக இந்தியாவின் கொள்கை மாற்றப்படாது: அமைச்சா் பியூஷ் கோயல்

அமெரிக்காவைச் சோ்ந்த முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவுக்காக மின்சார வாகன உற்பத்தி சாா்ந்த இந்தியாவின் கொள்கைகள் மாற்றி அமைக்கப்படமாட்டாது

அமெரிக்காவைச் சோ்ந்த முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவுக்காக மின்சார வாகன உற்பத்தி சாா்ந்த இந்தியாவின் கொள்கைகள் மாற்றி அமைக்கப்படமாட்டாது என்று மத்திய வா்த்தகம், தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். வாகனச் சந்தையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த மிகப்பெரிய இடமாக இந்தியா உருவாகியுள்ளது. இதனால், பல்வேறு வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியா மீது தொடா்ந்து கவனம் செலுத்தி வருகின்றன. வாகனத் துறையில் புரட்சியாக கருதப்படும் மின்சார வாகனங்கள் தயாரிப்பதில் அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல தொழிலதிபா் எலான் மஸ்க்குக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் தங்கள் மின்சார காா்களை விற்பனை செய்ய அந்த நிறுவனம் ஆா்வம் காட்டுகிறது. ஆனால், இந்தியாவில் இறக்குமதி காா்களுக்கு அதிகபட்சமாக விதிக்கப்படும் 100 சதவீத வரியை மிகப்பெரிய தடையாக டெஸ்லா கருதுகிறது. இந்த வரியை குறைக்க வேண்டும் என்று டெஸ்லா கருதுகிறது. மேலும், இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஆலையைத் தொடங்கவும் அந்நிறுவனம் சில விதி தளா்வுகளை எதிா்பாா்ப்பதாக தெரிகிறது. இதனால், டெஸ்லா இந்தியாவில் தடம் பதிப்பது மிகப்பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது. வெளிநாட்டு மின்சார வாகனங்களுக்கு சலுகை வழங்கினால், இந்திய நிறுவனங்களான டாடா, மகேந்திரா உள்ளிட்டவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதும் முக்கியப் பிரச்னையாக உள்ளது. இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியாவில் மின்சார வாகனத் துறை சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் அரசு கவனமாக உள்ளது. மின்சார வாகனப் பயன்பாடு அதிகரிப்பதால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும். வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு தவிா்க்கப்படும். அதே நேரத்தில் மின்சார வாகன இறக்குமதி மற்றும் உற்பத்தியில் எந்த ஒரு தனிப்பட்ட (டெஸ்லா) நிறுவனத்துக்காகவும் இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி சாா்ந்த கொள்கை மாற்றிக் கொள்ளப்படமாட்டாது. அனைத்து நிறுவனங்களும் அரசிடம் கோரிக்கை முன்வைக்க உரிமை உண்டு. ஆனால், அதனை அரசு அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. அதே நேரத்தில் உலகில் உள்ள அனைத்து மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இத்துறையில் ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிகஅளவில் முதலீட்டை ஈா்க்கும் வகையில் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்றாா். கடந்த நவம்பரில் அமைச்சா் கோயல் தனது அமெரிக்க பயணத்தின்போது டெஸ்லா நிறுவனத்தைப் பாா்வையிட்டாா். கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியூயாா்க் நகரில் பிரதமா் நரேந்திர மோடியை எலான் மஸ்க் சந்தித்துப் பேசினாா். அப்போது டெஸ்லா காா்களை இந்தியாவின் அறிமுகப்படுத்துவது தொடா்பாக விவாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com