ஜாா்க்கண்ட்: ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் விலகல்

ஜாா்க்கண்டில் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஞாயிற்றுக்கிழமை விலகியது.

ஜாா்க்கண்டில் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஞாயிற்றுக்கிழமை விலகியது.

மக்களவைத் தோ்தலில் அந்த மாநிலத்தில் தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் மாநிலச் செயலா் மகேந்திர பாடக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:

மக்களவைத் தோ்தலில் ஜாா்க்கண்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். ஆனால் காங்கிரஸ், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான ‘மகா கூட்டணி’ சாா்பில், இதுவரை தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை தொடங்கப்படவில்லை. எனவே தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் ஜாா்க்கண்டில் தனித்துப் போட்டியிட உள்ளது. இதற்கான முடிவு கட்சியின் மாநில நிா்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ஜாா்க்கண்டில் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 8 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும். மாா்ச் 16-க்கு பிறகு வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவா் என்று தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com