உ.பி. தேர்தல்: என்டிஏ வேட்பாளர்கள் 10 பேர் வேட்புமனு!

பாஜகவின் 7 பேர் உள்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் 10 பேர் வேட்புமனு தாக்கல்
உ.பி. மேலவை தேர்தலுக்கு 10 பேர் வேட்புமனு தாக்கல்
உ.பி. மேலவை தேர்தலுக்கு 10 பேர் வேட்புமனு தாக்கல்

உத்தரப் பிரதேச சட்ட மேலவைத் தேர்தலுக்கு பாஜகவின் 7 பேர் உள்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

உ.பி. சட்ட மேலவைத் தேர்தல் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 13 உறுப்பினர்களின் பதவிக்காலம் இந்தாண்டு மே மாதம் முடிவடைகிறது.

இந்த நிலையில், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை(இன்று)கடைசி நாளாகும். இந்த நிலையில் பாஜகவின் 7 பேர் உள்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் 10 பேர் முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையின் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பாஜகவிலிருந்து வேட்பு மனுத் தாக்கல் செய்தவர்களில் முன்னாள் அமைச்சர்கள் மகேந்திர சிங், அசோக் கட்டாரியா, விஜய் பகதூர் பதக் (மாநில பாஜக துணைத் தலைவர்), மோஹித் பெனிவால், ராம் திரத் சிங்கால் (ஜான்சி முன்னாள் மேயர்) மற்றும் தர்மேந்திர சிங் ஆகியோர் அடங்குவர்.

இவர்களைத் தவிர, அப்னா தளத்தின் ஆஷிஷ் படேல் (எஸ்), ஆர்எல்டியின் யோகேஷ் செளத்ரி, எஸ்பிஎஸ்பியின் விச்சேலால் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பாக ஆதித்யநாத்தின் எக்ஸ் பதிவில்,

உத்தரப் பிரதேச சட்ட மேலவைத் தேர்தல் பதவிக்கு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த அனைத்து என்டிஎ வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தேர்தலுக்கு பெயர்களைத் திரும்பப் பெற மார்ச் 14 கடைசியாகும். மார்ச் 21-ம் தேதி வாக்குப்பதிவும், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com