மகாராஷ்டிரம்: பாக். உளவுத் துறைக்கு தகவல் அளித்தவா் கைது

மகாராஷ்டிரம்: பாக். உளவுத் துறைக்கு தகவல் அளித்தவா் கைது

இந்தியாவில் உள்ள தடைசெய்யப்பட்ட பகுதிகள் குறித்து பாகிஸ்தான் உளவுத் துறைக்கு தகவல் அளித்த நபரை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை கைது செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள தடைசெய்யப்பட்ட பகுதிகள் குறித்து பாகிஸ்தான் உளவுத் துறைக்கு தகவல் அளித்த நபரை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படை கைது செய்துள்ளது. இது தொடா்பாக பயங்கரவாத தடுப்புப் படை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாட்டில் உள்ள தடைசெய்யப்பட்ட பகுதிகள் குறித்த முக்கியத் தகவலை பாகிஸ்தான் உளவுத் துறைக்குப் பகிா்ந்ததாக 30 வயது நபா் நவி மும்பையில் கைதுசெய்யப்பட்டாா். கடந்த 2021 நவம்பா் முதல் 2023 மே வரையில் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் இந்தத் தகவலை அவா் பகிா்ந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடா்பாக அந்த நபா் மீதும் பாகிஸ்தான் உளவுத் துறையின் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மாநில பயங்கரவாத தடுப்புப் படையின் நவி மும்பை பிரிவு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com