மேற்கு வங்கத்தில் பாஜக, திரிணமூலை தோற்கடிப்போம்: சீதாராம் யெச்சூரி

இந்தியா கூட்டணி (காங்கிரஸ்-இடதுசாரிகள்) பாஜக, திரிணமூல் காங்கிரஸை தோற்கடிக்கும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி தெரிவித்தாா்.
சீதாராம் யெச்சூரி
சீதாராம் யெச்சூரி

மேற்கு வங்கத்தில் இந்தியா கூட்டணி (காங்கிரஸ்-இடதுசாரிகள்) பாஜக, திரிணமூல் காங்கிரஸை தோற்கடிக்கும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி தெரிவித்தாா். இந்தியா கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, அங்குள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளா்களை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு அவா் தொகுதி ஒதுக்கவில்லை. மேலும், தேசிய அளவில் மட்டுமே இந்தியா கூட்டணியில் இருப்பதாகவும், மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என அனைவரையும் தோற்கடிக்கப்போவதாகவும் மம்தா கூறினாா். தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த யெச்சூரியிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‘அனைத்து கட்சிகளுக்கும் தன்னிச்சையாக முடிவெடுக்க உரிமை உண்டு. திரிணமூல் காங்கிரஸின் வேட்பாளா் அறிவிப்பு மூலம் இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் அனைத்தும் மேற்கு வங்கத்தில் கைகோத்து போட்டியிட வேண்டும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த விஷயத்தில் எங்கள் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. மேற்கு வங்கத்தில் மதசாா்பற்ற சக்திகள் அனைவரும் இணைந்து பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸை தோற்கடிப்போம். ஜனநாயகத்தைக் காக்க பாஜகவும், திரிணமூல் காங்கிரஸும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com