குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவதில் காலதாமதம் ஏன்? உள்துறை அமைச்சகம் விளக்கம்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு இன்று (மார்ச் 11) அறிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவதில் காலதாமதம் ஏன்? உள்துறை அமைச்சகம் விளக்கம்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு இன்று (மார்ச் 11) அறிவித்துள்ளது.

கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார்.

இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த இஸ்லாமியர்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி, நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தில் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி 2019, டிசம்பரில் போராட்டம் வெடித்தது. இதனிடையே, 2020-ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்று பரவியதைத் தொடர்ந்து, இச்சட்டம் அமல்படுத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி இம்மாத மூன்றாவது வாரத்தில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கழித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கரோனா பெருந்தொற்றால் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2015க்கு முன் இந்தியா வந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் ஆகியோர் குடியுரிமை பெற இணையதளம் மூலம் விண்ணபிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com