பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த கோவா முதல்வர்!

குடியுரிமை திருத்தச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பாரத வரலாற்றில் முக்கியமான நாள்...
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம்(சிஏஏ) அமல்படுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் பிரமோத் சாவந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர் 12-ல் ஒப்புதல் அளித்தார்.

இந்தச் சட்டமானது, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014, டிசம்பர் 31-க்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத மதச் சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வகை செய்கிறது. அதாவது ஹிந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குகிறது.

இதுதொடர்பாக சாவந்த்யின் எக்ஸ் பதிவில்,

குடியுரிமை திருத்தச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பாரத வரலாற்றில் முக்கியமான நாள்.

சிஏஏ விதிகளை அறிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com