ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன வர்த்தகப்பிரிவு தலைமை அதிகாரி உள்பட பலர் ராஜிநாமா!

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு ஊழியர்கள் பலர் திடீரென ராஜிநாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன வர்த்தகப்பிரிவு தலைமை அதிகாரி உள்பட பலர் ராஜிநாமா!

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்யவுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், அதன் வர்த்தகப் பிரிவின் தலைமை அதிகாரி உள்பட வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த பலர் திடீரென ராஜிநாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் தற்போது சுமார் 9,000 ஊழியர்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டுக்கு ரூ.100 கோடி வருவாயை சேமிக்கும் முயற்சியாக, அந்நிறுவனத்தைச் சேர்ந்த 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, வர்த்தகப் பிரிவின் தலைமை அதிகாரி உள்பட வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த பலர் நிறுவனத்தை விட்டு விலகிவிட்டதாகவும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வருவாய் குறிப்பிடத்தக்க அளவில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாகவும் அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தினசரி 250 விமானங்களை இயக்கி வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், சமீபத்தில் ரூ.1,060 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com