இணையவழியில் பேருந்து பயணச்சீட்டுகள் பதிவு: அபார எண்ணிக்கை!

இணையவழியில் பேருந்து பயணச்சீட்டுகள் பதிவு: அபார எண்ணிக்கை!

பஸ் டிக்கெட் ஆன்லைன் புக்கிங் முன்பதிவு குறித்த ஆய்வு

இணையம் வழியாக பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்பவர்கள் குறித்த ஆய்வு விவரங்களை ரெட்பஸ் வலைதளம் வெளியிட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் பதிவு செய்பவர்களில் 67 சதவிகிதம் பேர் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நிலையில் உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள்.

33 சதவிகிதம் பேர் மட்டுமே மெட்ரோ நகரங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிக்கை பேருந்து போக்குவரத்து துறையின் வளர்ச்சியைக் காட்டுவதாக ரெட்பஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி பிரகாஷ் சங்கம் தெரிவித்துள்ளார்.

18 முதல் 25 வயதுக்குள் இருப்பவர்கள் 29 சதவிகிதம் பேரும் 26 முதல் 36 வயதுக்குள் இருப்பவர்கள் 39 சதவிகிதம் பேரும் இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.

இவர்களில் 33 சதவிகிதம் பேர் பெண்கள். தனியாக பயணிப்பவர்களின் விகிதம் 52 சதவிகிதம்.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் பேருந்து இருக்கைகள் நிறையும் விகிதம் 82 சதவிகிதமாக உள்ளது.

குறைந்தபட்சமாக மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் 67 சதவிகிதம் பேருந்து இருக்கைகள் நிறைவடைவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த சராசரி இருக்கைகள் நிரம்பும் விகிதம் 77 சதவிகிதம்.

2023-ல் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் 3.60 கோடி எண்ணிக்கையில் நாடு முழுவதும் பயணச்சீட்டுகள் பதிவாகியுள்ளது ரெட்பஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com