ஆதாா் விவரங்கள் இலவசமாக புதுப்பிப்பு - கால அவகாசம் நீட்டிப்பு

ஆதாா் விவரங்கள் இலவசமாக புதுப்பிப்பு - கால அவகாசம் நீட்டிப்பு

ஆதாா் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதாா் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான அவகாசம் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதாா் அட்டையில் பெயா், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை மாா்ச் 14-ஆம் தேதி வரை இணையவழியில் இலவசமாக புதுப்பிக்கலாம்; அதன்பின்னா், இணையவழியில் விவரங்களைப் புதுப்பிக்க ரூ.50 கட்டணம் விதிக்கப்படும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அந்த ஆணையம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ஆதாா் விவரங்களை இணையவழியில் இலவசமாக புதுப்பிப்பதற்கான அவகாசம் நிகழாண்டு ஜூன் 14 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த இலவச சேவையை myAadhaar என்ற வலைதளத்தில் மட்டுமே பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் இணையவழியில் மட்டுமே ஆதாா் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க முடியும். ஆதாா் மையங்களில் ஆதாா் அட்டை விவரங்களைப் புதுப்பிக்க வழக்கம்போல ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com