அயோத்தி ராமரை தரிசிக்க எவ்வளவு நேரம் ஆகிறது?

ஸ்ரீ ராமரை தரிசிக்க நாளொன்றுக்கு சுமார் 1.5 லட்சம் பக்தர்கள் வருகை தருவதாக கோயில் அறக்கட்டளை
அயோத்தி ராமரை தரிசிக்க எவ்வளவு நேரம் ஆகிறது?

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமரை தரிசிக்க நாளொன்றுக்கு சுமார் 1.5 லட்சம் பக்தர்கள் வந்து செல்வதாக கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா விடுத்துள்ள எக்ஸ் பதிவில்,

ஸ்ரீ ராம ஜென்ம பூமிக்கு வரும் பக்தர்கள் காலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை தரிசனத்திற்கு வரலாம். கோயிலில் ஸ்ரீராமரை தரிசிப்பதற்கான அனைத்து வழிமுறைகளும் சுலபமாகவே உள்ளது. பக்தர்கள் 60 முதல் 75 நிமிடங்களுக்குள் ஸ்ரீ பாலராமரை தரிசனம் செய்யலாம்.

பக்தர்கள் வசதிக்காகவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் மொபைல் போன்கள், காலணிகள், பணம் மற்றும் பிற தனிப்பட்ட பொருள்களை கோயில் வளாகத்திற்கு வெளியே வைத்துவிட்டு செல்லுமாறு கேடுக்கொள்கிறோம்.

ஸ்ரீராமரை தரிசிக்க வரும் பக்தர்கள் பூக்கள், மாலைகள், பிரசாதம் கொண்டு வர வேண்டாம் என்று கோயில் அறக்கட்டளை அறிவுறுத்தியுள்ளது.

அயோத்திக்கு பக்தர்கள் அலைகடலென திரண்டு வருவதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் கையாளும் முறையை பின்பற்ற அயோத்தி கோவில் நிர்வாகத்தினர் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com