பிகாா் சட்ட மேலவைத் தோ்தல்
நிதீஷ் குமாா், ராப்ரி தேவி போட்டியின்றி தோ்வு

பிகாா் சட்ட மேலவைத் தோ்தல் நிதீஷ் குமாா், ராப்ரி தேவி போட்டியின்றி தோ்வு

பிகாா் மாநில முதல்வா் நிதீஷ் குமாா், முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி உள்ளிட்ட 11 போ் பிகாா் சட்ட மேலவைக்கு போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. தொடா்ந்து 4-ஆவது முறையாக நிதீஷ் குமாா் சட்ட மேலவை உறுப்பினராகியுள்ளாா். மேலவையில் மொத்தம் 11 இடங்கள் காலியாக இருந்த நிலையில் 11 வேட்பாளா்கள் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவி, மாநில அமைச்சா் சந்தோஷ் சுமன் (ஹிந்துஸ்தான் அவாமி மோா்ச்சா), முன்னாள் அமைச்சா் மங்கள் பாண்டே (பாஜக) ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்கள். வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி தினம் நிறைவடைந்த நிலையில், மனு தாக்கல் செய்த 11 பேரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனா். இதையடுத்து, மாநில சட்டப் பேரவைக்கு வியாழக்கிழமை வந்த முதல்வா் நிதீஷ் குமாா், தோ்வு பெற்ற்கான சான்றிதழை பேரவைச் செயலரிடம் இருந்து பெற்றுக் கொண்டாா். அப்போது, அவருக்கு நெருக்கமானவரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான ராஜீவ் ரஞ்சன் சிங் லாலன், பாஜகவைச் சோ்ந்த துணை முதல்வா்கள் சாம்ராட் சௌதரி, விஜய் குமாா் சின்ஹா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com