இடர் மேலாளர் விருதுக்கு தேர்வான ரிசர்வ் வங்கி!

மத்திய ரிசர்வ் வங்கி
மத்திய ரிசர்வ் வங்கி

மும்பை: மத்திய வங்கி விருதுகள் 2024 இன் ஒரு பகுதியாக லண்டனை தளமாகக் கொண்ட மத்திய வங்கியின் இடர் மேலாளர் விருதுக்கு ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள சென்ட்ரல் பேங்கிங் வழங்கும் இடர் மேலாளர் விருதுக்கு, மத்திய வங்கி விருதுகள் 2024இன் ஒரு பகுதியாக, இடர் மேலாண்மை கட்டமைப்பை அறிமுகப்படுத்தியதற்காக, ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

12,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் சமீபத்திய வருடாந்திர அறிக்கையின்படி ரிசர்வ் வங்கி போன்ற பெரிய நிறுவனத்தில் இடர் மேலாண்மை கட்டமைப்பை உருவாக்குவது ஒருபோதும் எளிதாக இருக்காது என்று சென்ட்ரல் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com