2024 உலகிற்கே தேர்தல் ஆண்டு: தேர்தல் ஆணையம்

2024 உலகிற்கே தேர்தல் ஆண்டு: தேர்தல் ஆணையம்

2024 ஒட்டுமொத்த உலகிற்கே தேர்தல் ஆண்டு என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

புதுதில்லி: 2024 ஒட்டுமொத்த உலகிற்கே தேர்தல் ஆண்டு என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

புது தில்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் சனிக்கிழமை தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வாக தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, 2024 மக்களவைத் தேர்தலை திருவிழா போன்று நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் சேர்ந்து நீங்களும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள்.

2024 ஒட்டுமொத்த உலகிற்கே தேர்தல் ஆண்டு தான். 2024 இல் மட்டும் 60 நாடுகளில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

2024 உலகிற்கே தேர்தல் ஆண்டு: தேர்தல் ஆணையம்
விஷ்வகுருவா மவுனகுருவா? - முதல்வர் சரமாரி கேள்வி

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 98.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர் 49.7 கோடி, பெண் வாக்காளர் 47.1 கோடி.இவர்களில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.18 லட்சம்.மூன்றாம் பாலினத்தவர் 48.044 பேர் வாக்களிக்க உள்ளனர். கடந்த 2019 மக்களவைத் தேர்தலைவிட 2024 தேர்தலில் 6 சதவீதம் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டில் முதல் முறை வாக்காளர்கள் 5.26 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com