ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையர்

மக்களவைக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன்4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையர்

மக்களவைத் தேர்தல் ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில்,

மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன்4-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 20 முதல் மார்ச் 27 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம், வேட்பு மனு பரிசீலனை செய்ய கடைசி நாள் மார்ச் 28, திரும்பப்பெற கடைசி நாள் மார்ச் 30 என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com