ஒடிசாவில் 3.35 கோடி வாக்காளர்கள்!

1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள இடங்களில் துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்
ஒடிசாவில் 3.35 கோடி வாக்காளர்கள்!
ஒடிசாவில் 3.35 கோடி வாக்காளர்கள்!

ஒடிசா மாநிலத்தில் 1.65 கோடி பெண்கள் உள்பட சுமார் 3.35 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மே 13 முதல் ஜூன் 1 வரை நான்கு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

மாநிலத்தில் கிராமப்புறங்களில் 33,429 உள்பட மொத்தம் 37,809 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் எனத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

1,500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள இடங்களில் துணை வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றார்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்வுதளம், குடிநீர், மின் இணைப்பு மற்றும் தனித்தனி கழிவறைகள் போன்ற குறைந்தபட்ச வசதிகள் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்படும்.

மொத்த வாக்குச்சாவடிகளில் 60 சதவீதம் வாக்குப்பதிவு நாளில் இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படும்.

வாக்குப்பதிவு செயல்முறையைக் கண்காணிக்க மைக்ரோ அப்சர்வர்கள், விடியோகிராஃபி மற்றும் சிசிடிவி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com