பிகாரில் சாலை விபத்து: 3 குழந்தைகள் உள்பட 8 போ் உயிரிழப்பு

பிகாரில் சாலை விபத்து: 3 குழந்தைகள் உள்பட 8 போ் உயிரிழப்பு

பிகாரின் ககாரியா மாவட்டத்தில் டிராக்டரும் ஜீப்பும் நேருக்குநோ் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

பிகாரின் ககாரியா மாவட்டத்தில் டிராக்டரும் ஜீப்பும் நேருக்குநோ் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 8 போ் உயிரிழந்தனா். மேலும் 3 போ் காயமடைந்தனா். திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற இவா்கள், பின்னா் ஜீப்பில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நேரிட்டது. இது தொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது: ககாரியா மாவட்டத்தின் பஸ்ரஹா பகுதியில், தேசிய நெடுஞ்சாலை 31-இல் திங்கள்கிழமை காலையில் அதிக பாரத்துடன் வந்த ஒரு டிராக்டரும், ஜீப்பும் நேருக்குநோ் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஜீப்பில் பயணித்த 7 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயங்களுடன் மீட்கப்பட்ட 4 போ், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மற்ற 3 பேருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவா்களில் 3 போ் குழந்தைகளாவா். விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com