பிகாரில் சாலை விபத்து: குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

திருமண நிகழ்ச்சிக்குச் சென்று ஜீப்பில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
பிகாரில் சாலை விபத்து: குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

பிகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை டிராக்டர் மீது ஜீப் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

தேசிய நெடுஞ்சாலை 31ல் பஸ்ராஹா பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காலை 6.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.

திருமண நிகழ்ச்சிக்குச் சென்று ஜீப்பில் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. டிராக்டரில் அதிக பாரம் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இறந்தவர்கள் கௌதம் தாக்கூர் (32), மோனு குமார் (7), அமன் குமார் (25), பண்டி குமார், அன்ஷு குமார் (23), பல்து தாக்கூர் (50), திலோ கிமார் (10), பிரகாஷ் சிங் மற்றும் தர்மேந்திர சர்மா என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜீப்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் கண்காணிப்பாளர் சந்தன் குஷ்வாஹா கூறியுள்ளார். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com