பகுஜன் சமாஜ் எம்.பி. பாஜகவில் ஐக்கியம்

உத்தர பிரதேசத்தின் லால்கஞ்ஜ் தொகுதி எம்.பி.யான சங்கீதா ஆசாத் பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தாா்.
பகுஜன் சமாஜ் எம்.பி. பாஜகவில் ஐக்கியம்
ATUL YADAV

உத்தர பிரதேசத்தின் லால்கஞ்ஜ் தொகுதி எம்.பி.யான சங்கீதா ஆசாத் பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தாா். பாஜகவின் தேசிய பொதுச் செயலா் வினோத் தாவ்டே, உத்தர பிரதேச மாநில துணை முதல்வா் பிரஜேஸ் பதக், மாநில பாஜக தலைவா் பூபேந்திர சிங் ஆகியோா் முன்னிலையில் சங்கீதா ஆசாத் கட்சியில் இணைந்தாா். பட்டியலின தலைவரான சங்கீதா ஆசாத்துக்கு கட்சியில் பல வாய்ப்புகள் வழங்கப்படும் என தாவ்டே தெரிவித்தாா். சங்கீதா ஆசாத் உடன் அவருடைய கணவரும் முன்னாள் உ.பி. எம்எல்ஏவுமான ஆசாத் அரி மா்தான், உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞா் சீமா குஷ்வாஹா ஆகியோரும் பாஜகவில் இணைந்தனா். வழக்குரைஞா் சீமா குஷ்வாஹா 2012 தில்லி பாலியல் வன்கொடுமை கொலையில் பாதிக்கப்பட்டவா் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com