அமலாக்கத்துறை சம்மனை புறக்கணித்தார் மகேஷ் ஜோஷி!

ஆவணங்களைச் சேகரிக்க போதிய அவகாசம் இல்லாததால் மகேஷ் ஜோஷி அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜராகவில்லை.
அமலாக்கத்துறை சம்மனை புறக்கணித்தார் மகேஷ் ஜோஷி!

ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை புறக்கணித்துள்ளார்.

ஜல் ஜீவன் மிஷனில் நடந்த முறைகேடுகள் தொடர்பான பணமோசடி விசாரணையில் ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

ஆவணங்களைச் சேகரிக்க போதிய அவகாசம் இல்லாததால் மகேஷ் ஜோஷி அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜராகவில்லை.

தேவையான அனைத்து ஆவணங்களுடன் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக 15 நாள்கள் அவகாசம் கோரியுள்ளார் ஜோஷி.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சில ஆவணங்களுடன் ஆஜராகும்படி அமலாக்கத்துறை கூறியுள்ளது. தனது பதவிக் காலத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் டெண்டர் எடுத்ததில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com