என் மீது வீண்பழி சுமத்த வேண்டாம்: அசோக் சவாண்

என்னைப் பற்றி அப்படிச் சொன்னால், அது நியாயமற்றது மற்றும் ஆதாரமற்றது.
என் மீது வீண்பழி சுமத்த வேண்டாம்: அசோக் சவாண்
Center-Center-Chennai

ராகுல் காந்தி என் மீது வீண்பழி சுமத்திவருவதாக அசோக் சவாண் கூறியுள்ளார்.

கடந்த மாதம் காங்கிரஸிலிருந்து விலகிய அசோக் சவான், சோனியா காந்தியை சந்தித்து நான் சிறைக்குச் செல்ல விரும்பவில்லையெனக் கதறி அழுததாக ராகுல் காந்தி மும்பையில் ஞாயிறன்று நடைபெற்ற பேரணியில் கூறியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த சவாண், அவர் யாரையும் பெயர் குறிப்பிட்டுக் கூறவில்லை என்றாலும், அவர் என்னைப் பற்றி அப்படிச் சொன்னால், அது நியாயமற்றது மற்றும் ஆதாரமற்றது.

உண்மை என்னவென்றால், நான் காங்கிரஸிலிருந்து ராஜிநாமா செய்யும் வரை, கட்சித் தலைமையகத்தில் பணிபுரிந்தேன். எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த சில நிமிடங்களில் கட்சியில் இருந்தும் ராஜிநாமா செய்தேன்.

அதுவரை, நான் ராஜிநாமா செய்ததாக யாருக்கும் தெரியாது. நான் சோனியா காந்தியை சந்திக்கவே இல்லை இது ஆதாரமற்றது என்று அவர் கூறியுள்ளார்.

சவான் கடந்த மாதம் காங்கிரஸிலிருந்து விலகிய பிறகு, அவர் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) சேர்ந்தார், அது அவரை மகாராஷ்டிராவிலிருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு பரிந்துரைத்தது.

பின்னர் சவாண் மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டில், மும்பையில் ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து சவாண் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். 2014-19ல் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com