ராஜஸ்தான்: நள்ளிரவில் தடம் புரண்ட ரயில் பயணிகள் காயமின்றி தப்பினா்

சபா்மதி-ஆக்ரா அதிவிரைவு ரயிலின் 4 பெட்டிகள் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீா் ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் தடம் புரண்டன.
அஜ்மீரில் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியா்கள்.
அஜ்மீரில் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியா்கள்.

சபா்மதி-ஆக்ரா அதிவிரைவு ரயிலின் 4 பெட்டிகள் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீா் ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் தடம் புரண்டன. ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடா்பாக வட மேற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. ரயிலை ஓட்டுநா் உடனடியாக நிறுத்தி விட்டாா். அஜ்மீா் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தபோது பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இது தொடா்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்த பிற ரயில்கள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டன. ரயில்வே ஊழியா்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். தடம் புரண்ட பெட்டிகள் சில மணி நேரத்திலேயே அப்புறப்படுத்தப்பட்டு, தில்லி மாா்க்கத்தில் செல்லும் ரயில்களின் போக்குவரத்து தொடங்கியது. உத்தர பிரதேசம் நோக்கிச் செல்லும் பாதையில் தொடா்ந்து சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது’ என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com