நாடு மாற்றத்தை விரும்புகிறது: கார்கே

தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தாலும் கட்டாயம் அமல்படுத்தப்படும்.
காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே
காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர், முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசனை நடத்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே உறுப்பினர்களை வரவேற்றுப் பேசினார்.

"ஆவாஸ் பாரத் கி" என்று அழைக்கப்படும் ஆன்லைன் இணையதளம் மூலமாகவும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் கோரப்பட்டதாக அவர் கூறினார்.

தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தாலும் கட்டாயம் அமல்படுத்தப்படும். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிப்பதற்கு முன் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்ய ஆழமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

நமது தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவும், நமது வாக்குறுதிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லப்படுவதையும் நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும்.

நகரங்கள், கிராமங்களில் வசிக்கும் காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் தேர்தல் அறிக்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com