கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பன்னியன் ரவீந்திரன் போட்டியிடுகிறார்.
கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸும் இந்திய கம்யூனிஸ்டும் கேரளத்தில் ஒருவருக்கொருவர் எதிர்த்து களம் காண்பதால் அங்கு போட்டி கடுமையாகியுள்ளது.

திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பன்னியன் ரவீந்திரன் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார்.

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!
திருவனந்தபுரம்: மோதும் மூன்று நட்சத்திர வேட்பாளர்கள்!

இந்நிலையில், இந்தியா கூட்டணியில் இருக்கும் இரு கட்சிகள் ஒரே தொகுதியில் எதிரும் புதிருமாக போட்டியிடுவது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள சசி தரூர், திருவனந்தபுரம் தொகுதியில் தனக்கெதிராக இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பதன் மூலம், பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரிப்பதற்கான முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதை எதிர்ப்பதன் மூலம் கூட்டணி தர்மத்தை இந்திய கம்யூனிஸ்ட் மீறிவிட்டதாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் சசி தரூர்.

இதனையடுத்து சசி தரூரின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியதாவது, ”இது அபத்தமான பேச்சு. சசி தரூரை போன்ற படித்த நபர், கேரளத்தின் வரலாற்றை முறையாக புரிந்திருக்க வேண்டும். பிரிவினைவாத, பாசிச சக்திகளை இடதுசாரிகள் தான் எதிர்த்து வருகின்றன. காங்கிரஸை சேர்ந்த பல தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

பாஜகவுக்கு எதிராக தலைமையேற்று எதிர்த்து வருவதாக கூறிவரும் ராகுல் காந்தி, வயநாட்டில் இடதுசாரி முன்னணியை எதிர்த்து போட்டியிடுவது ஏன்? காங்கிரஸின் முக்கிய அரசியல் எதிரிகள் யார் என்பதை மக்களிடம் காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com