புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு!

தெலங்கானா ஆளுநர் பொறுப்பையும் சி.பி.ராதாகிருஷணன் கூடுதலாக கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ராதாகிருஷ்ணன்
சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜார்கண்ட் ஆளுநராக பதவி வகித்து வரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும், தெலங்கானா ஆளுநர் பொறுப்பையும் சி.பி.ராதாகிருஷணன் கூடுதலாக கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில ஆளுநரும், புதுவை துணைநிலை (பொ) ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது பதவிகளை திங்கள்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், ஜார்கண்ட் ஆளுநராக பதவி வகித்து வரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com