கேரளத்தில் வாகனப் பேரணியில் பிரதமர் மோடி!

பாலக்காட்டில் என்டிஏ கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் கேரளத்தில் பிரதமர் மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.
பாலக்காட்டில் பிரதமர் மோடி
பாலக்காட்டில் பிரதமர் மோடி

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பிரதமர் மோடி கேரளத்தில் உள்ள பாலக்காட்டில் வாகன பேரணியில் ஈடுபட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், களத்தில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், கேரளத்தின் பாலக்காட்டில் என்டிஏ கட்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் கேரளத்தில் பிரதமர் மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தின் கோயம்புத்தூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் பாலக்காட்டுக்கு வந்தடைந்தார்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரதமர் மோடி நின்றபடி கோட்டமைந்தன் அஞ்சுவிளக்கிலிருந்து தொடங்கி, நகரத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் நோக்கி பேரணி நடத்த உள்ளார்.

பேரணி நடைபெறும் வழிநெடுகிலும் இருபுறமும் பூக்கள், மாலைகள், கட்சிக் கொடிகள், மோடியின் பிளக்ஸ் போர்டுகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் , பாஜக ஆதரவாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்றனர்.

வாகனப் பேரணியில் செல்லும் வழியில், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் 'பாரத் மாதா கி ஜே', 'மோடிஜி ஸ்வாகதம்' மற்றும் 'மோடி கி ஜெய்' என்ற முழக்கங்களை எழுப்பினர்.

மூன்று மாதங்களுக்குள் பிரதமர் மோடி மாநிலத்திற்கு வருவது இது ஐந்தாவது முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com