ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து 5 பேர் உடல் கருகிப் பலி!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பலி.
ராஜஸ்தானில் சிலிண்டர் வெடித்து 5 பேர் உடல் கருகிப் பலி!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இன்று காலை சிலிண்டர் வெடித்து மூன்று சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் விஸ்வர்கமா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெய்சல்யா கிராமத்தில் காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

சம்பவம் தொடர்பாக ஏசிபி அசோக் சௌகான் கூறுகையில்,

வீட்டின் நுழைவுப் பகுதியில் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்ததால் சிலிண்டர் வெடித்ததும் குடும்பத்தினர் யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை.

இறந்தவர்கள் ராஜேஷ்(26), அவரது மனைவி ரூபி(24) இஷு(7), தில்குஷ்(2), குஷ்மணி(4) என அடையாளம் காணப்பட்டனர். பிகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பம் ஜெய்ப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர்.

ராஜேஷ் காலையில் சிலிண்டரை மாற்றியதாகவும், அதை சரியாகப் பொருத்தாததால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு படை வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதற்கிடையில், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com