தந்தையைக் கொன்று உடலை வீட்டின் முற்றத்தில் புதைத்த மகன்!

தந்தையைக் கொன்று உடலை வீட்டின் முற்றத்தில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையைக் கொன்று உடலை வீட்டின் முற்றத்தில் புதைத்த மகன்!

ராஜஸ்தானின் துங்கர்பூர் மாவட்டத்தில் தந்தையைக் கொன்று உடலை வீட்டின் முற்றத்தில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேங் பரண்டா(60) இவருக்கு பிரகாஷ், தினேஷ், பப்பு, சுன்னிலால் என்ற நான்கு மகன்கள் இருந்தனர். அதில் பிரகாஷ் அவரது தாயும் அகமதாபாத்தில் வசித்துவந்தனர். மேலும் இருவர் துங்கர்பூரில் உள்ள பல்வாரா கிராமத்தில் வசித்து வந்தனர். சுன்னிலாலுடன் தந்தை தனி வீட்டில் வசித்து வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தினேஷ், பப்புவும் கடந்த இரண்டு நாள்களாக தந்தையைக் காணவில்லை என்று பிரகாஸுக்கு தகவல் கொடுத்தனர். பிரகாஷ் தனது தாயுடன் கிராமத்திற்கு வந்து சுன்னி லாலை விசாரித்தார்.

சுன்னிலால் தந்தையைக் குறித்து பொய்யான கதைகளைச் சொல்லிவந்தார். ஆனால் ஒருகட்டத்தில் தந்தையைத் தான் கொன்றதாக ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

போலீஸார் விசாரணையில், சுன்னி லால் தனது தந்தை ராஜேங் பரண்டாவுடன் புதன்கிழமை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது அவர் தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகவும் கூறினார்.

இதையடுத்து பரண்டா சம்பவ இடத்திலேயே இறந்தார், சுன்னி லால் அவரது உடலை வீட்டின் முற்றத்தில் புதைத்ததாக போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சுன்னிலால் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com