பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி!

இந்த வழக்கில் இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலி!

பஞ்சாபின் சங்ரூ மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் தலைமை இயக்குனர் தலைமையில் நான்கு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

11 பேர் பாட்டியாலாவின் ராஜிந்திரா மருத்துவமனையிலும், 6 பேர் சங்ரூர் சிவில் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக சங்ரூர் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

திர்பா மற்றும் சுனம் தொகுதிகளில் உள்ள குஜ்ரான், திப்பி ரவிதாஸ்புரா மற்றும் தண்டோலி குர்த் கிராமங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கிராமங்களில் வேறு யாருக்காவது உடல்நிலை மோசமடைந்ததற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கண்டறியவும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com